Click here to go to the main page

கனடா இந்து ஆலய நிர்வாக குழுவின் சார்பாக, ரிச்மாண்ட் ஹில் இந்து ஆலயத்தின் இணைய தளத்திற்கு (Website) உங்கள் அனைவரையும் வருக, வருக என அழைக்கிறோம். கனடா பிரதேசத்தில் டொராண்டோ நகரில் ரிச்மாண்ட் ஹில் அல்லது "செல்வ மலை" என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கும் இவ்வாலயம், வட அமெரிக்காவிலேயே மிக பெரிய இந்து ஆலயமெனக் கருதப்படுகிறது. கணபத்ய, சைவ, வைஷ்ணவ, ஸ்கந்த, சாக்த வழிபாட்டு முறையினர் அனைவரும் பொதுவாக ஒரே இடத்தில் வணங்கும்படி அமையப்பெற்று, விநாயகர், சிவன், பார்வதி, விஷ்ணு, மஹாலக்ஷ்மி,ஆண்டாள், சுதர்சனர், முருகர், வள்ளி, தேவசேனா, சீதா லக்ஷ்மண ஹனுமாருடன் ராமர், துர்க்கை மற்றும் பைரவர், நவக்கிரக சந்நிதிகளுடன் இருப்பது இவ்வாலயத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். வட அமெரிக்காவிலேயே அழ்வார்களுக்கு சந்நிதி அமைத்து, அவர்களின் விக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஒரே கோவில், நம் கோவிலாகும். இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சந்திர மௌளீஸ்வரர் (சிவ பெருமான்) விக்ரஹம், காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திரர் காவிரி நதிக்கரையில் கண்டெடுத்து, ஆசி செய்து அருளிய விக்ரஹம் ஆகும். இப்படியாக கோவிலின் பெருமைகளை அள்ளிக்கொண்டே போகலாம். இவ்வரிய பெருமைகளைக்கொண்ட ரிச்மாண்ட் ஹில் ஆலய விவரங்களையும், கால வரையீடுகளையும், முக்கிய விழாக்கள் பற்றிய நிகழ்ச்சிகளையும் இந்த இணைய தளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இத்தமிழ் பிரிவு புதிய முயற்சியாதலால், குறைகளை மன்னித்து, உங்கள் ஆலோசனைகளை அளித்து, எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி   (Email) webmaster@thehindutemple.ca.


இவ்வார முக்கிய நிகழ்ச்சிகள்
பிப்ரவரி 05 - ஞாயிறு
பிரதோஷம் - ஸ்ரீ சிவன், ஸ்ரீ நந்திகேஸ்வரர் அபிஷேகம், பூஜை - மாலை 6:15 மணி

பிப்ரவரி 06 - திங்கள்
தைப்பூசம்
ஸ்ரீ முருகன் அபிஷேகம், பூஜை, தங்கரத புறப்பாடு - மாலை 5:30 மணி

பிப்ரவரி 07 - செவ்வாய்
பௌர்ணமி - ஸ்ரீ சத்ய நாராயணர் பூஜை - மாலை 6:00 மணி

பிப்ரவரி 08 - புதன்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநஷத்திரம்

பிப்ரவரி 10 - வெள்ளி
சங்கடஹர சதுர்த்தி - ஸ்ரீ விநாயகர் அபிஷேகம், பூஜை - மாலை 6:௦௦ மணி
தை மாத கடைசி வெள்ளி

பிப்ரவரி 11 - சனி
பெருமாள், ஸ்ரீ திருமழிசையாழ்வார் அபிஷேகம், பூஜை - காலை 10:30 மணி



புகைப்பட களஞ்சியம்

2011ம் வருட முக்கிய நிகழ்ச்சிகள்

2010ம் வருட முக்கிய நிகழ்ச்சிகள்
2009ம் வருட முக்கிய நிகழ்ச்சிகள்